Home தமிழகம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வு-உணவு தயாரிப்பவர்களுக்கு ஆலோசனை

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வு-உணவு தயாரிப்பவர்களுக்கு ஆலோசனை

4
0

ஆற்காடு : ஆற்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியை மாவட்ட அதிகாரி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக 2022 -23 ம் ஆண்டிற்கான 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும்  1,14,095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு ₹33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவக்கி வைத்தார்.இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 6 தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 661 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 16ம் தேதி நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி  துவக்கி வைத்தார்.இந்நிலையில், ஆற்காடு நகராட்சி தோப்புக்கானா வடக்கு தொடக்கப் பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளரும், ராணிப்பேட்டை மாவட்ட காலை உணவு வழங்கும் திட்ட கண்காணிப்பு அலுவலருமான வி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த உணவினை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு உணவு சாப்பிட்ட 279 மாணவ, மாணவிகளிடம் உணவின் ருசி குறித்து கேட்டறிந்தார். மேலும்உணவு தயாரிப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். பின்னர்  அங்கிருந்த பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் பாக்கியநாதன், வெங்கடேசன், ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் பாரதி, ஆற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனர்.

Previous articleகாரியாபட்டியில் அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்-வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை
Next articleசிவகாசி மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வராத ஆவின் பாலகங்கள்-திறந்து பால் விற்பனை செய்ய கோரிக்கை