Home உலகம் அமெரிக்க கைதியை விடுவித்தது தலிபான்

அமெரிக்க கைதியை விடுவித்தது தலிபான்

3
0

இஸ்லாமாபாத்: அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய மார்க் பெரிச் ஆப்கானிஸ்தானில் பத்து வருடங்களாக கட்டிடப் பொறியாளராக பணியா ற்றி வந்தார். இவர் 2020ம் ஆண்டு தலிபான்களால் பிணைய கைதியாக பிடிக்கப்பட்டார். இதே போல், நூர்ஜை என்ற ஹாஜி பஷீர் பல கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருளை கடத்தியதாக அமெரிக்க அரசால் கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தலிபான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, “மார்க் பெரிச் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஹாஜி பஷீர் தலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த பிணைய கைதிகள் பரிமாற்றம் இன்று (நேற்று) காபூல் விமான நிலையத்தில் நடந்தது,’’ என்று தெரிவித்தார்.

Previous articleஎலான் மஸ்க் அறிவிப்பு டெஸ்லாவில் மனித ரோபோ
Next articleஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் பழுது: புவி கண்காணிப்பு பணிகள் நிறுத்தம்