Home சினிமா அஜித் படத் தலைப்பு ‘துணிவு’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அஜித் படத் தலைப்பு ‘துணிவு’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

4
0

சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. அதோடு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே ஃபர்ஸ்ட் லுக் குறித்த பேச்சு வெளியான நிலையில் அதிரடியாக அதை அறிவித்துள்ளது படக்குழு.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் வலிமை என்ற படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தலைப்பு ஏதும் வைக்காத காரணத்தால் ‘ஏகே61’ என அறியப்பட்டது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. அதோடு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த சில நாட்களாகவே ஃபர்ஸ்ட் லுக் குறித்த பேச்சு வெளியான நிலையில் அதிரடியாக அதை அறிவித்துள்ளது படக்குழு. 

Previous articleமனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட கைதிகளுக்கு அனுமதி: பஞ்சாப் முன்முயற்சித் திட்டம்
Next articleஎடப்பாடி, வேலுமணியை உருவாக்கிய அதிமுக கொங்கு மண்டல பவர் சென்டர் – சசிகலா உறவினர் ராவணன் காலமானார்