Home தமிழகம் பரவும் ஃப்ளூ; மருத்துவமனைகளில் மாத்திரைகள் பற்றாக்குறை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பரவும் ஃப்ளூ; மருத்துவமனைகளில் மாத்திரைகள் பற்றாக்குறை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

4
0

மதுரை: ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவும்நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது, என்று எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தற்போது உள்ள சீதோசன நிலையில் காற்றின் மூலம் ஸ்வைன் ஃப்ளூ, கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டுமே ஒரு வகையான காய்ச்சல். இதில் ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரது சளி துகள்கள் காற்றில் கலந்து விடும். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது எளிதாக பாதிக்கப்படுகின்றனர். ஐந்து வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர்களை இந்த காய்ச்சல் கடுமையாக பாதிக்கிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது காலாண்டு தேர்வு காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்,

ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவும்நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்படுகிறது, என்று எதிர்கட்சித் துணைத் தலவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். 

Previous articleசேலம் அருகே ஆம்னி பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து: தந்தை – மகன் உள்பட 6 பேர் உயிரிழப்பு
Next articleபடித்தது வெறும் 12; வென்றது ரூ.1 கோடி!