Home சினிமா இந்திய சினிமா “முன்பிருந்த ராஷ்மிகா வேறு, இப்போதும் இருக்கும் ராஷ்மிகா வேறு”- ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

“முன்பிருந்த ராஷ்மிகா வேறு, இப்போதும் இருக்கும் ராஷ்மிகா வேறு”- ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

7
0

‘புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘குட் பை’ என்னும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், நடிகர் அமிதாப் பச்சன் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

Good Bye Movie | குட் பை படம்

இது பற்றிப் பேசிய அவர், “அமிதாப் பச்சன் சாருடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அற்புதமானது. என்னுடைய முதல் பாலிவுட் படத்திலேயே அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவரை முதல் முறை பார்த்தபோதே நான் பிரமித்துவிட்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர். படப்பிடிப்பின் போது ஒரு நடிகராக அவரது நடிப்பைப் பார்த்து நிறையத் தெரிந்து கொண்டேன். நான் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவள். எனவே படப்பிடிப்பின் என் சக நடிகர்களிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்தப் படத்திற்கு முன்பு இருந்த ராஷ்மிகா வேறு, இப்போதும் இருக்கும் ராஷ்மிகா வேறு. முற்றிலும் மாறுபட்டுள்ளேன். இதற்குக் காரணம் அமிதாப் பச்சன் சார்தான்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

‘புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘குட் பை’ என்னும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், நடிகர் அமிதாப் பச்சன் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
Good Bye Movie | குட் பை படம்இது பற்றிப் பேசிய அவர், “அமிதாப் பச்சன் சாருடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அற்புதமானது. என்னுடைய முதல் பாலிவுட் படத்திலேயே அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவரை முதல் முறை பார்த்தபோதே நான் பிரமித்துவிட்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர். படப்பிடிப்பின் போது ஒரு நடிகராக அவரது நடிப்பைப் பார்த்து நிறையத் தெரிந்து கொண்டேன். நான் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவள். எனவே படப்பிடிப்பின் என் சக நடிகர்களிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்தப் படத்திற்கு முன்பு இருந்த ராஷ்மிகா வேறு, இப்போதும் இருக்கும் ராஷ்மிகா வேறு. முற்றிலும் மாறுபட்டுள்ளேன். இதற்குக் காரணம் அமிதாப் பச்சன் சார்தான்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Previous articleகண்ணகி நகர் 196வது வார்டில் கால்வாயில் அடைப்பு சாலையில் கழிவுநீர் தேக்கம்
Next articleவாட்ஸ்அப்பில் வாக்கெடுப்பு அம்சம்: விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு