Home தமிழகம் முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து சென்னை ஐ.டி. பெண் தற்கொலை

முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து சென்னை ஐ.டி. பெண் தற்கொலை

4
0

கோபி: கோபி அருகே பாட்டியை பார்க்க வந்த சென்னை ஐ.டி.நிறுவன பெண், ஹீலியம் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி-மரகதமணி தம்பதியரின் மகள் இந்து (25). பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. இவருக்கும் கோபி அருகே உள்ள நலகண்டன்பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி (30) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே சென்னையில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோபி தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையறிந்த இந்து பாட்டியை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் கோபி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட இந்து இரவு வரை வெளிய வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி டேப் வைத்து ஒட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இத்தகவல் அறிந்த கோபி போலீசார் அங்கு சென்று இந்துவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இந்துவின் செல்லில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக ஹீலியம் வாயு அடங்கிய சிலிண்டரை ஆன்லைனில் வாங்கி பிளாஸ்டிக் கவரில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருமணமாகி 4 மாதங்களே ஆவதால், இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோபி கோட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleHappy Birthday Ashwin | பிட்சின் தன்மைக்கு அப்பாற்பட்ட வீரன், துணிச்சலும் நம்பிக்கையுமே இவன் ஆயுதம்!
Next article“அரசின் மீதான கோபத்தால் குற்றச்சாட்டு” – தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என மா.சுப்பிரமணியன் விளக்கம்