Home தமிழகம் திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பது தவறான தகவல்: அமைச்சர் மஸ்தான்...

திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பது தவறான தகவல்: அமைச்சர் மஸ்தான் விளக்கம்

4
0

விழுப்புரம்: திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு போர்டுக்கு சொந்தம் எனத் தவறாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செல்கின்றனர். இதை உணர்ந்து,புதிதாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 181பேரை வெளிநாட்டுக்கு அனுப்பிஉள்ளோம். அடுத்து இங்கிலாந்துக்கு 481 பேர் செவிலியர் பணிக்குசெல்ல உள்ளனர்.

திருச்சி அருகே 8 கிராமங்கள் வக்பு போர்டுக்கு சொந்தம் எனத் தவறாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Previous articleஉக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை தனியார் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
Next articleஅடுத்த 5 ஆண்டுகளில் 5 முக்கிய இலக்குகள்: வரும் 2027-ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு பதஞ்சலி குழுமம் திட்டம்