Home சினிமா “ஆபாசக் காட்சிகளில் நடித்ததற்கான காரணம் இதுதான்!” – மனம் திறந்த நடிகை அமண்டா செய்ஃபிரைட்

“ஆபாசக் காட்சிகளில் நடித்ததற்கான காரணம் இதுதான்!” – மனம் திறந்த நடிகை அமண்டா செய்ஃபிரைட்

32
0

பிரபல ஹாலிவுட் நடிகையான அமண்டா செய்ஃபிரைட் ‘Mean Girls’, ‘American Gun’, ‘Gypsies’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது 36 வயதாகும் இவர், சிறுவயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி இவர் 19 வயதில் ‘Mean Girls’ எனும் படத்தில் ஆபாசக் காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இதனால் இது படம் வெளியான சமயங்களில் சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அமண்டா செய்ஃபிரைட், தனது வாழ்க்கை பற்றியும் திரைத்துறையில் தான் சந்தித்த சவால்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

அமண்டா செய்ஃபிரைட்

அப்போது அவர், “19 வயதாக இருக்கும் போது நான் ஆடையின்றி நடித்ததை எல்லோரும் கேலி செய்தீர்கள். அப்போது அதை ஏன் செய்தேன் என்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த வயதில் வேலையில் தொடர வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. அதனால்தான் அதைச் செய்தேன். சொல்லப்போனால் அப்படி நடிக்கவேண்டும் என நான் மறைமுகமாக வற்புறுத்தப்பட்டேன். இதனால் நிறைய ஆண்கள் அப்படத்தின் காட்சியை நினைவுகூர்ந்து என்னைக் கேலி செய்தார்கள். அந்தச் சமயங்களில் நான் மிகவும் உடைந்து போனேன்” என்று கூறினார்.

மேலும், ‘Wicked’ எனும் படத்தில் தன்னை நடிக்க விடாமல் நிராகரிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், “பொதுவாக நமது தொழிலில் முன்னேறவிடாமல் நசுக்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். புதிதாக வருபவர்கள் இதை அதிகமாகச் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் எனது வேலையில் யாரும் என்னை நசுக்கிவிட முடியாது. அதேபோல் என் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்று கூறினார்.

பிரபல ஹாலிவுட் நடிகையான அமண்டா செய்ஃபிரைட் ‘Mean Girls’, ‘American Gun’, ‘Gypsies’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது 36 வயதாகும் இவர், சிறுவயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி இவர் 19 வயதில் ‘Mean Girls’ எனும் படத்தில் ஆபாசக் காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இதனால் இது படம் வெளியான சமயங்களில் சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அமண்டா செய்ஃபிரைட், தனது வாழ்க்கை பற்றியும் திரைத்துறையில் தான் சந்தித்த சவால்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அமண்டா செய்ஃபிரைட்அப்போது அவர், “19 வயதாக இருக்கும் போது நான் ஆடையின்றி நடித்ததை எல்லோரும் கேலி செய்தீர்கள். அப்போது அதை ஏன் செய்தேன் என்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த வயதில் வேலையில் தொடர வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருந்தது. அதனால்தான் அதைச் செய்தேன். சொல்லப்போனால் அப்படி நடிக்கவேண்டும் என நான் மறைமுகமாக வற்புறுத்தப்பட்டேன். இதனால் நிறைய ஆண்கள் அப்படத்தின் காட்சியை நினைவுகூர்ந்து என்னைக் கேலி செய்தார்கள். அந்தச் சமயங்களில் நான் மிகவும் உடைந்து போனேன்” என்று கூறினார்.
மேலும், ‘Wicked’ எனும் படத்தில் தன்னை நடிக்க விடாமல் நிராகரிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், “பொதுவாக நமது தொழிலில் முன்னேறவிடாமல் நசுக்குவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். புதிதாக வருபவர்கள் இதை அதிகமாகச் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் எனது வேலையில் யாரும் என்னை நசுக்கிவிட முடியாது. அதேபோல் என் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்று கூறினார்.

Previous articleசமூக நலத் திட்டங்களும் இலவசங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்றம் கருத்து
Next articleகாதல் ரகசியம் சொன்ன பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா; கடுப்பான கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்