Home சினிமா சினிமா விமர்சனம் Army of the Dead: ஜாம்பி கூடாரத்தில் கொள்ளையடிக்கச் சென்றால்… ஜாக் ஸ்னைடரின் ஆக்ஷன் படம்...

Army of the Dead: ஜாம்பி கூடாரத்தில் கொள்ளையடிக்கச் சென்றால்… ஜாக் ஸ்னைடரின் ஆக்ஷன் படம் எப்படி?

64
0

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜாக் ஸ்னைடரின் ‘ஆர்மி ஆஃப் தி டெட்’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. ஆம், ரசிகர்கள் போராடி வெளியிட வைத்த அதே ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் இயக்குநர்தான். ஹாலிவுட்டில் காட்சிமொழிக்குப் பெயர்போன கலைஞன். 300 (தமிழில் ‘300 பருத்தி வீரர்கள்’), வாட்ச்மென், மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சூப்பர்ஹீரோ ஜானரிலியே பல காலம் டென்ட் போட்டவர், தற்போது ஜாம்பிக்கள் நிறைந்த ஒரு ஹெய்ஸ்ட் படத்தை எடுத்திருக்கிறார். ஸ்னைடரின் முதல் படமே ஜாம்பி படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாம்பி, ஹெய்ஸ்ட் எனத் தனித்தனியாக இரண்டு ஜானர்களும் பெரும் ரசிகர்களைச் சம்பாதித்துவிட்ட நிலையில், இரண்டையும் ஒன்றிணைத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் எப்படி?
Army of the Dead

கேஸினோக்களுக்கும் இரவு வாழ்க்கைக்கும் பெயர்போன லாஸ் வேகஸ் நகரமே ஜாம்பிக்களால் நிறைந்திருக்கிறது. அந்த நகரையே க்வாரன்டீனில் வைத்திருக்கும் அரசு, ஒரு நல்ல நாள் பார்த்து மொத்த நகரையும் அணு ஆயுதம் கொண்டு சாம்பலாக்க முடிவு செய்கிறது. அதற்குள் அங்கே கேஸினோ ஒன்றில் லாக்கரிலுள்ள பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது ஒரு கும்பல். டேவ் பாடிஸ்டா தலைமையில் ஜாம்பிக்கள் நிறைந்த நகரில் கால் வைக்கும் அந்தக் குழு சந்திக்கும் சவால்களும், போராட்டங்களும்தான் கதை.

வேகமாக ஓடும் ஜாம்பிக்கள், ஜாம்பி அரசன், அரசி, கட்டமைப்பாக இணைந்து வாழும் ஜாம்பி கூட்டம், ஜாம்பி புலி… இதுவரை ஜாம்பிப் படங்களில் இல்லாததை எல்லாம் புகுத்தியிருக்கிறார் ஜாக் ஸ்னைடர். பெரும்பாலான படங்களில் ஜாம்பிக்களை அறிவற்ற, நெறிப்படுத்த முடியாத விநோத ஜந்துக்களாகத்தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதை மாற்றி எழுதியது இந்த ஹெய்ஸ்ட் படத்துக்கு இன்னமும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க, எலும்புகள் உடைய, தோட்டாக்கள் துளைக்க ஒரு ரணகள திருவிழாவாகக் காட்சிகள் அரங்கேறுகின்றன.

ஜாம்பி புலிஜாம்பி படங்களில் சிறந்த என்டர்டெயினாரான ‘ஜாம்பிலேண்ட்’ வகை காமெடி சினிமாவாக இது இல்லை என்றாலும் ஒரு சீரிஸான ஜாம்பி படமாக வேறு தளத்தில் பயணிக்கிறது.
Army of the Dead

டேவ் பாடிஸ்டாவிற்குப் பொறுப்பான குழுத் தலைவர் வேடம். கூடவே, தன் மகளும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதால் ஒரு எமோஷனல் ஆங்கிளும் சேர்ந்திருக்கிறது. முன்னாள் ரெஸ்ட்லிங் வீரரான பாடிஸ்டாவிற்கு நடிப்பில் மிகப்பெரிய பிரேக் தந்த படம் மார்வெல்லின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’. இந்தப் படம் அந்த ஹூயூமர் கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பான நடிகனைக் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக அவருக்கும் அவர் மகளுக்கும் இடையே நடக்கும் ரெஸ்ட்டாரன்ட் குறித்த உரையாடல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பாடிஸ்டா இப்படியான பாத்திரங்களில் நடிப்பார் என நம்பலாம். கயோட்டியாக வரும் நோரா, சேஃப் ஓப்பனராக வரும் மத்தியாஸ் ஆகியோர் ஈர்க்கிறார்கள்.

எல்லா ஹெய்ஸ்ட் படங்களையும்போல இங்கேயும் குழுவிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள். ஒருவர் கில்லர், ஒருவர் சேஃப் ஓப்பன் செய்பவர், ஒருவர் ஹெலிகாப்டர் ஓட்டுபவர், சிலர் ஆயுதங்களை ஏந்துபவர்கள் என அதே டெம்ப்ளேட்தான். பிரச்னை இங்கிருந்துதான் தொடங்குகிறது. பாடிஸ்டாவிற்கு எமோஷனலாக ஒரு பின்கதை கொடுத்தவர்கள், பிற கதாபாத்திரங்களை டீலில் விட்டிருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களில் அவர்களை அறிமுகம் செய்துவிட்டு வேட்டைக்குள் சென்றுவிடுவதால் படத்தின் பிற்பாதியில் அவர்கள் எடுக்கும் எமோஷனல் முடிவுகள், அவர்களின் போராட்டங்கள் எதுவுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் கடத்தவில்லை.

‘காலா’ ஹூமா குரேஷி | Army of the Dead

‘காலா’ ஹூமா குரேஷி ஒரு சில காட்சிகளில் தலைகாட்டுகிறார். சொல்லப்போனால் அவரால்தான் கதையே திசைமாறுகிறது. ஆனால், அதிலும் பெரிய அழுத்தமில்லை. அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற வெயிட்டேஜ் கொடுக்கப்படாததால் ஒரு தாயாக அவரின் போராட்டங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரங்கள் ஓடும் ஒரு படத்தில் பாத்திர வார்ப்புகளும் கதையில் அவர்களின் பயணங்களும் இப்படி அரைகுறையாக இருப்பது பெரிய பலவீனம்.

மக்கள் போராட்டம்… கட் இல்லா `ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்’ பார்க்கலாமா? #SnyderCut

இதற்கெல்லாம் மேக்கிங்கில் மேட்ச் செய்ய முனைந்திருக்கிறார் ஸ்னைடர். இந்த முறை ஒளிப்பதிவையும் அவரே செய்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ரூல்ஸ்படி, நமக்குப் பழக்கப்பட்ட ஒளிப்பதிவாக இல்லாமல் பல ப்ளர்ரான காட்சிகள், வித்தியாசமான கோணங்கள், சீக்குவன்ஸாக சில புதிய ஐடியாக்கள், ஜாம்பிக்களுக்கான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் எனப் படக்குழு அவ்வளவு உழைத்திருக்கிறது. காட்ஸில்லா vs காங், ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த டாம் ஹோல்கன்பெர்க்கின் (ஜங்கி XL) இசையும், படத்தில் ஆங்காங்கே கதைக்கு ஏற்றவாறு ஒலிக்கும் பாடல்களும் பக்கபலம். டெக்னிக்கலாக வழக்கம்போல அசத்தியிருக்கும் ஸ்னைடரின் டீம், திரைக்கதையில்தான் சொதப்பியிருக்கிறது.

Army of the Deadவித்தியாசமான ஐடியாக்களின் குவியலாக மட்டுமே படம் இருப்பதாலும், எமோஷனல் விஷயங்கள் குறைவாக இருப்பதாலும் இந்த ஆர்மி சற்றே அடிவாங்குகிறது. இருந்தும் விஷுவலாகவும் டெக்னிக்கலாகவும் சமரசம் செய்துகொள்ளாத ஸ்னைடரின் இந்த ‘ஆர்மி ஆஃப் தி டெட்’ வேறு வழியின்றி திரையரங்குகளை மறந்திருக்கும் நமக்கு நிச்சயம் ஒரு நல்ல ட்ரீட்தான்! இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே இதன் முன்கதையையும் படமாக எடுக்க முடிவு செய்துவிட்டார்கள். அதில் இந்தப் பிரச்னைகளை சரி செய்வார்கள் என நம்புவோம்.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜாக் ஸ்னைடரின் ‘ஆர்மி ஆஃப் தி டெட்’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. ஆம், ரசிகர்கள் போராடி வெளியிட வைத்த அதே ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் இயக்குநர்தான். ஹாலிவுட்டில் காட்சிமொழிக்குப் பெயர்போன கலைஞன். 300 (தமிழில் ‘300 பருத்தி வீரர்கள்’), வாட்ச்மென், மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சூப்பர்ஹீரோ ஜானரிலியே பல காலம் டென்ட் போட்டவர், தற்போது ஜாம்பிக்கள் நிறைந்த ஒரு ஹெய்ஸ்ட் படத்தை எடுத்திருக்கிறார். ஸ்னைடரின் முதல் படமே ஜாம்பி படம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாம்பி, ஹெய்ஸ்ட் எனத் தனித்தனியாக இரண்டு ஜானர்களும் பெரும் ரசிகர்களைச் சம்பாதித்துவிட்ட நிலையில், இரண்டையும் ஒன்றிணைத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் எப்படி?
Army of the Deadகேஸினோக்களுக்கும் இரவு வாழ்க்கைக்கும் பெயர்போன லாஸ் வேகஸ் நகரமே ஜாம்பிக்களால் நிறைந்திருக்கிறது. அந்த நகரையே க்வாரன்டீனில் வைத்திருக்கும் அரசு, ஒரு நல்ல நாள் பார்த்து மொத்த நகரையும் அணு ஆயுதம் கொண்டு சாம்பலாக்க முடிவு செய்கிறது. அதற்குள் அங்கே கேஸினோ ஒன்றில் லாக்கரிலுள்ள பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது ஒரு கும்பல். டேவ் பாடிஸ்டா தலைமையில் ஜாம்பிக்கள் நிறைந்த நகரில் கால் வைக்கும் அந்தக் குழு சந்திக்கும் சவால்களும், போராட்டங்களும்தான் கதை.
வேகமாக ஓடும் ஜாம்பிக்கள், ஜாம்பி அரசன், அரசி, கட்டமைப்பாக இணைந்து வாழும் ஜாம்பி கூட்டம், ஜாம்பி புலி… இதுவரை ஜாம்பிப் படங்களில் இல்லாததை எல்லாம் புகுத்தியிருக்கிறார் ஜாக் ஸ்னைடர். பெரும்பாலான படங்களில் ஜாம்பிக்களை அறிவற்ற, நெறிப்படுத்த முடியாத விநோத ஜந்துக்களாகத்தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதை மாற்றி எழுதியது இந்த ஹெய்ஸ்ட் படத்துக்கு இன்னமும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க, எலும்புகள் உடைய, தோட்டாக்கள் துளைக்க ஒரு ரணகள திருவிழாவாகக் காட்சிகள் அரங்கேறுகின்றன.
ஜாம்பி புலிஜாம்பி படங்களில் சிறந்த என்டர்டெயினாரான ‘ஜாம்பிலேண்ட்’ வகை காமெடி சினிமாவாக இது இல்லை என்றாலும் ஒரு சீரிஸான ஜாம்பி படமாக வேறு தளத்தில் பயணிக்கிறது.
Army of the Deadடேவ் பாடிஸ்டாவிற்குப் பொறுப்பான குழுத் தலைவர் வேடம். கூடவே, தன் மகளும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதால் ஒரு எமோஷனல் ஆங்கிளும் சேர்ந்திருக்கிறது. முன்னாள் ரெஸ்ட்லிங் வீரரான பாடிஸ்டாவிற்கு நடிப்பில் மிகப்பெரிய பிரேக் தந்த படம் மார்வெல்லின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’. இந்தப் படம் அந்த ஹூயூமர் கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பான நடிகனைக் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக அவருக்கும் அவர் மகளுக்கும் இடையே நடக்கும் ரெஸ்ட்டாரன்ட் குறித்த உரையாடல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பாடிஸ்டா இப்படியான பாத்திரங்களில் நடிப்பார் என நம்பலாம். கயோட்டியாக வரும் நோரா, சேஃப் ஓப்பனராக வரும் மத்தியாஸ் ஆகியோர் ஈர்க்கிறார்கள்.
எல்லா ஹெய்ஸ்ட் படங்களையும்போல இங்கேயும் குழுவிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள். ஒருவர் கில்லர், ஒருவர் சேஃப் ஓப்பன் செய்பவர், ஒருவர் ஹெலிகாப்டர் ஓட்டுபவர், சிலர் ஆயுதங்களை ஏந்துபவர்கள் என அதே டெம்ப்ளேட்தான். பிரச்னை இங்கிருந்துதான் தொடங்குகிறது. பாடிஸ்டாவிற்கு எமோஷனலாக ஒரு பின்கதை கொடுத்தவர்கள், பிற கதாபாத்திரங்களை டீலில் விட்டிருக்கிறார்கள். ஒரு சில நிமிடங்களில் அவர்களை அறிமுகம் செய்துவிட்டு வேட்டைக்குள் சென்றுவிடுவதால் படத்தின் பிற்பாதியில் அவர்கள் எடுக்கும் எமோஷனல் முடிவுகள், அவர்களின் போராட்டங்கள் எதுவுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் கடத்தவில்லை.
‘காலா’ ஹூமா குரேஷி | Army of the Dead’காலா’ ஹூமா குரேஷி ஒரு சில காட்சிகளில் தலைகாட்டுகிறார். சொல்லப்போனால் அவரால்தான் கதையே திசைமாறுகிறது. ஆனால், அதிலும் பெரிய அழுத்தமில்லை. அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற வெயிட்டேஜ் கொடுக்கப்படாததால் ஒரு தாயாக அவரின் போராட்டங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரங்கள் ஓடும் ஒரு படத்தில் பாத்திர வார்ப்புகளும் கதையில் அவர்களின் பயணங்களும் இப்படி அரைகுறையாக இருப்பது பெரிய பலவீனம்.
மக்கள் போராட்டம்… கட் இல்லா `ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்’ பார்க்கலாமா? #SnyderCutஇதற்கெல்லாம் மேக்கிங்கில் மேட்ச் செய்ய முனைந்திருக்கிறார் ஸ்னைடர். இந்த முறை ஒளிப்பதிவையும் அவரே செய்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ரூல்ஸ்படி, நமக்குப் பழக்கப்பட்ட ஒளிப்பதிவாக இல்லாமல் பல ப்ளர்ரான காட்சிகள், வித்தியாசமான கோணங்கள், சீக்குவன்ஸாக சில புதிய ஐடியாக்கள், ஜாம்பிக்களுக்கான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் எனப் படக்குழு அவ்வளவு உழைத்திருக்கிறது. காட்ஸில்லா vs காங், ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த டாம் ஹோல்கன்பெர்க்கின் (ஜங்கி XL) இசையும், படத்தில் ஆங்காங்கே கதைக்கு ஏற்றவாறு ஒலிக்கும் பாடல்களும் பக்கபலம். டெக்னிக்கலாக வழக்கம்போல அசத்தியிருக்கும் ஸ்னைடரின் டீம், திரைக்கதையில்தான் சொதப்பியிருக்கிறது.
Army of the Deadவித்தியாசமான ஐடியாக்களின் குவியலாக மட்டுமே படம் இருப்பதாலும், எமோஷனல் விஷயங்கள் குறைவாக இருப்பதாலும் இந்த ஆர்மி சற்றே அடிவாங்குகிறது. இருந்தும் விஷுவலாகவும் டெக்னிக்கலாகவும் சமரசம் செய்துகொள்ளாத ஸ்னைடரின் இந்த ‘ஆர்மி ஆஃப் தி டெட்’ வேறு வழியின்றி திரையரங்குகளை மறந்திருக்கும் நமக்கு நிச்சயம் ஒரு நல்ல ட்ரீட்தான்! இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே இதன் முன்கதையையும் படமாக எடுக்க முடிவு செய்துவிட்டார்கள். அதில் இந்தப் பிரச்னைகளை சரி செய்வார்கள் என நம்புவோம்.

Previous articleகல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி போலி பைனான்சியர் உள்பட 3 பேர் கைது
Next articleமீண்டும் படங்களை தயாரிக்கும் முடிவில் தனுஷ்?