Home தமிழகம் வெள்ளியங்கிரி மலையிலிருந்து 2 டிராக்டர் அளவு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்

வெள்ளியங்கிரி மலையிலிருந்து 2 டிராக்டர் அளவு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்

7
0

கோவை: மேற்குதொடர்ச்சி மலை அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் இருந்து இரண்டு டிராக்டர் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றி உள்ளனர்.

கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். தென் கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், பிப்ரவரி மாதம் கடைசி முதல் மே மாதம் வரை மட்டுமே மலை ஏறுவதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். முள்ளாங்காடு வனத்துறை சோதனைச் சாவடி வழியாக, மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கோயில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக சுமார் 6 கி.மீ பக்தர்கள் மேலே நடந்து செல்கின்றனர்.

கோவை மேற்குதொடர்ச்சி மலை அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் இருந்து இரண்டு டிராக்டர் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகளை தன்னார்வலர்கள் அகற்றி உள்ளனர். 

Previous article‘இது தொடக்கம்தான்’ – மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரங்களை புத்தகமாக வெளியிட்ட தமிழக அரசு
Next articleஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்