Home மற்றவை க்ரைம் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை; கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை; கரூர் நீதிமன்றம் தீர்ப்பு

19
0

கரூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் கொசூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டிச் சேர்ந்தவர்கள் கணேசன் (28) மற்றும் முனியப்பன் (23). இதன் அருகேயுள்ள மேட்டூரை சேர்ந்தவர் 23 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி சமைப்பதற்காக வயலில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை கணேசன் மற்றும் முனியப்பன் இருவருக்கும் இரு சக்கர வாகனத்தில் தனியார் சோளக்காட்டிற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்துள்ளது

Previous articleபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
Next articleபெங்களூரு | ‘Fat-Free’ பிளாஸ்டிக் சர்ஜரி; 21 வயது கன்னட நடிகை உயிரிழப்பு