Home தமிழகம் “பள்ளிக் கல்விக்கு காமராஜர்… கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

“பள்ளிக் கல்விக்கு காமராஜர்… கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

40
0

செங்கல்பட்டு: பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்று சொன்னால், கல்லூரி கல்விக்கு கருணாநிதி என்றும், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்..

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது: "இந்த அரசு உயர் கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி அப்போதே நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இன்று தேசிய உயர் கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழகத்தில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்றால், அந்தப் பெருமை முழுவதும் மறைந்த முதல்வர் கருணாநிதியையே சாரும்.

பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்று சொன்னால், கல்லூரி கல்விக்கு கருணாநிதி என்றும், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்றும், தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Previous articleதிருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா?.. வெளியூர் பக்தர்கள் தொடர்ந்து தவிப்பு
Next articleகுப்பைகள் குவிந்த இடத்தில் பூத்து குலுங்கும் மலர்கள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அசத்தும் ஆற்றூர் பேரூராட்சி: முன் மாதிரியாக செயல்படும் பல்நோக்கு தற்சார்பு குடில்