Home தமிழகம் நவீன வசதிகளுடன் ரூ5.59 கோடியில் புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி துவக்கம்: மாற்று இடத்தில்...

நவீன வசதிகளுடன் ரூ5.59 கோடியில் புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி துவக்கம்: மாற்று இடத்தில் செயல்பட நடவடிக்கை

20
0

நாமக்கல்: நாமக்கல்லில் நவீன வசதிகளுடன் புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி துவங்கியது. தொடர்ந்து மாற்று இடத்தில் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் -திருச்செங்கோடு ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் பின்புறம், தினசரி மற்றும் வாரச்சந்தை கடந்த 9 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை காய்கறி, பழ விற்பனை கடைகள் உள்ளன. இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மழை பெய்தால் சந்தை சேறும், சகதியுமாக மாறி விடும். இதனால் வியாபாரிகளும், சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ5.69 கோடியில் புதிய சந்தை வளாகம் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம், புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி பூமிபூஜையுடன் துவங்கியது. இதில் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். புதிய சந்தை வளாகம் அமைக்கும் பணி துவங்கியதால், அங்கு கடை வைத்துள்ள 160 வியாபாரிகளுக்கு சந்தையின் முகப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கடை அமைக்கும் பணியில் நேற்று வியாபாரிகள் ஈடுபட்டனர். இதையொட்டி பழைய கடைகளை பிரித்து புதிய இடத்தில் கடைகளை அமைக்க தொடங்கியுள்ளனர். புதியதாக அமைக்கப்படும் சந்தை வளாகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. 96 கடைகள் ஷட்டர் வசதியுடனும், 172 கடைகள் ஒரே குடையின் கீழ் என்ற வகையில் பிரமாண்ட ஷட்டருடன் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபரிகளுக்கு தேவையான வசதிகள் இந்த சந்தை வளாகத்தில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். வாரசந்தை வளாகமும் தனியாக அமைக்கப்படுகிறது. 6 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு சந்தை வளாகம் கொண்டுவரப்படும். அதுவரை தினசரி மார்க்கெட் மற்றும் வாரசந்தை ஆகியவை தற்போது உள்ள சந்தையின் முகப்பு பகுதியில் நடைபெறும் என நகராட்சி ஆணையாளர் சுதா, பொறியாளர் சுகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Previous articleமுதல்போக நெல் சாகுபடிக்காக ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Next articleசாலை வசதி இல்லாத மலைக்கிராமம்: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி