Home தமிழகம் தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு

33
0

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 14, பெண்கள் 20 என மொத்தம் 34 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,686 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 16,337 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 324 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 31 ஆகவும், சென்னையில் 16 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஆண்கள் 14, பெண்கள் 20 என மொத்தம் 34 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,686 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleகிறிஸ் கெயில், டிவில்லியர்ஸுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரம் அளித்து கவுரவித்த ஆர்சிபி!
Next articleகோவை மாவட்டம் சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் சுவர் இடிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு