Home உலகம் ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் 

ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் 

9
0

புதுடெல்லி: அரசு முறைப் பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அரசுமுறைப்பயணமாக ஜமைக்காவுக்கு சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தைத் திறந்து வைத்தார். 

Previous articleவெள்ளியங்கிரி மலையிலிருந்து 2 டிராக்டர் அளவு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்
Next articleகொழுப்பை குறைக்கும் சிகிச்சையின்போது கன்னட இளம் நடிகை சேத்தனா மரணம்