Home விளையாட்டு சில்லி பாய்ன்ட்…

சில்லி பாய்ன்ட்…

38
0

* கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 22ம் தேதி பாரிசில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக  தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்  ராம்குமார் ராமநாதன்(178வது ரேங்க்) ஒரு மணி 9 நிமிடங்களில்  6-3, 6-2 என நேர் செட்களில்  ஜெர்மனி வீரர் யான்னிக் ஹான்ப்மன்னை (114வது ரேங்க்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் யூகி போம்ரி  3-6, 5-7 என நேர் செட்களில் துருக்கி வீரர் அல்துக் செலிபைக்கிடம் தோல்வி அடைந்தார்.* செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலவச கைப்பந்து பயிற்சி முகாம்  ஆலந்தூரில் நடக்கிறது.  பரங்கிமலை  மோகித் பூங்கா  திடலில் நடைபெறும்  இந்த முகாமை   யுனைடட்  கைப்பந்து கழகம் 2வது ஆண்டாக நடத்துகிறது. ஜூன் 5  வரை நடைபெறும் இந்த  இலவச முகாமில் 10 பள்ளிகளை சேர்ந்த  200 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.  மாணவிகளுக்கு சங்கீதா என்ற தனிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முகாமில் 7 – 19 வயதில் உள்ள மாணவ, மாணவிகள் பயிற்சிக்கு  சேரலாம். மேலும் தகவல் அறிய: கலீல் ஷெரீப், 98844 85070.* டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி தகுதிச் சுற்று ஆண்கள் மல்யுத்தம் 125 கிலோ எடை பிரிவு பைனலில் தோற்ற சதேந்தர் மாலிக், நடுவர் ஜக்பீர் சிங்கை சரமாரியாகத் தாக்கியதை அடுத்து அவருக்கு ஆயுள் தடை விதிக்கப்படுவதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.* ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினாலும், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் களமிறங்குவத உறுதி செய்துள்ளார்.* ஆர்சிபி அணி ‘ஹால் ஆப் பேம்’ பிரபலங்களாக கிறிஸ் கேல், ஏ.பி.டி.வில்லியர்ஸ் கவுரவிக்கப்பட்டுள்ளனர். * சென்னை இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் (எச்ஐடி), வரும் கல்வியாண்டில் இளம்நிலை, முதுநிலை படிப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மே 29க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் அறிய, பதிவு செய்ய: விளையாட்டுத் துறை பேராசிரியர் செல்வமுத்துக்குமரன், 80562 96924. * கோவில்பட்டியில் அகில இந்திய அளவிலான 12வது தேசிய இளையோர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பீகார் அணி 11-1 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியது. அருணாச்சலப் பிரதேசம் 5-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரையும், ஜார்கண்ட் 10-0 என்ற கோல் கணக்கில் கோவாவையும் வென்றன.

Previous articleகேன்ஸ் திரைப்பட விழா: ‘பாரம்பரியமும் பன்முக கலாசாரமும் நமது பலம்’ – பிரதமர் மோடி வாழ்த்து
Next articleகடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்… அகர்வால் நம்பிக்கை!