Home தமிழகம் சிபிஐ காண்பித்த எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: ப.சிதம்பரம் விளக்கம்

சிபிஐ காண்பித்த எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: ப.சிதம்பரம் விளக்கம்

35
0

சென்னை: சிபிஐ சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் 5 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

சிபிஐ சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில பல்வேறு இடங்களில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி
Next articleநெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு