Home தமிழகம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரிப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரிப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

42
0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (மே 17) காலை 1000 கன அடியாக அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த 12 நாட்களுக்கு மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (மே 17) காலை 1000 கன அடியாக அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleகறம்பக்குடி அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு இஸ்லாமியர் இல்ல விழாவுக்கு மாமன் சீருடன் சென்று அசத்திய கிராம மக்கள்
Next article“இனி மென்மையான போக்கு இல்லை… கைது நடவடிக்கைதான்” – சென்னைக் கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை