Home விளையாட்டு காமன்வெல்த் போட்டிகள் 2022 | மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க தேர்வான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

காமன்வெல்த் போட்டிகள் 2022 | மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க தேர்வான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

39
0

புதுடெல்லி: 2022 ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது. நேற்று மல்யுத்த விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 

Previous articleடெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
Next articleதிருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் 3 வங்கி லாக்கரில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது: 2 வது நாள் சோதனையில் விஜிலன்ஸ் அதிரடி