Home தமிழகம் காஞ்சி | வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சி | வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

42
0

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர், கடந்த 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 'உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடகலை பிரிவினரையும் வேத பாராயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது சட்ட விரோதமானது' என்று கூறியிருந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleதஞ்சாவூர் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி
Next articleகப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!