Home தமிழகம் கல்வியில் பின்தங்கிய வட தமிழகம் | “அரசு ஒப்புக்கொண்டதற்கு பாராட்டு; ஆனால், இன்னும் பிரச்சினைகள் ஏராளம்”...

கல்வியில் பின்தங்கிய வட தமிழகம் | “அரசு ஒப்புக்கொண்டதற்கு பாராட்டு; ஆனால், இன்னும் பிரச்சினைகள் ஏராளம்” – ராமதாஸ்

37
0

சென்னை: "கல்வியில் வட தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்யப்பட்ட நிலையில், வட தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வியில் வட தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்திருக்கிறது. வட தமிழகம் கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்டு, அப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், இது கடலில் தெரியும் பனிப்பாறையின் மேல் முனையளவு தான் என்பதை அரசு உணர வேண்டும்.

“கல்வியில் வட தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்யப்பட்ட நிலையில், வட தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleகுமரி மாவட்டத்தில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்கம் புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு
Next articleதிரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்சே