Home தமிழகம் கல்குவாரியில் மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

கல்குவாரியில் மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

8
0

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கான அனைத்து உபகரணங்களும், இயந்திரங்களும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

கல்குவாரியில் நடைபெறும் மீட்பு பணிகளை செவ்வாய்கிழமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெறுகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர், காவல்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் என அனைவரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். போதுமான உபகரணங்களும், இயந்திரங்களும் நம்மிடம் உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இரும்பு ரோப் வரவழைக்கப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகள் தொடர்பாக நாட்டிலுள்ள சுரங்கத்துறை நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கான அனைத்து உபகரணங்களும், இயந்திரங்களும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

Previous articleமாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு
Next articleதிரைத்துறை வணிகத்தில் இந்தியா முன்னேற்றம்: கேன்ஸ் பட விழாவில் மத்திய அமைச்சர் பெருமிதம்