Home தமிழகம் கடமலைக்குண்டுவில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

கடமலைக்குண்டுவில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

9
0

வருசநாடு: கடமலைக்குண்டுவில் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடமலைக்குண்டுவில் உள்ள தேனி பிரதான சாலையில், இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், மற்ற பகுதிகளை விட இந்த கிராமத்தில் மற்றும் தேனி சாலை குறுகலாக காணப்படுகிறது. மேலும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைக்கின்றனர். இதனால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சமயங்களில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று விடுகின்றன. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கிக் கொள்கிறது. கடமலைக்குண்டு கிராமத்தில்‌ தேனி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ‌கோரிக்கை விடுத்துள்ளனர். இது கூறித்து சமூக ஆர்வலர் காளீஸ்வரன் கூறுகையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Previous articleசாலை வசதி இல்லாத மலைக்கிராமம்: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி
Next articleபுதுக்கோட்டை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்