Home சினிமா ‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ – ட்விட்டரில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘பீஸ்ட்’ இறுதிக்...

‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ – ட்விட்டரில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘பீஸ்ட்’ இறுதிக் காட்சி

11
0

'பீஸ்ட்' படத்தின் இறுதிக் காட்சி குறித்து முன்னாள் விமானப்படை பைலட் ஒருவர், 'இதில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மூலம் 'பீஸ்ட்' படத்தின் இறுதிக்காட்சி டிரெண்டாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ் லீ, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், மே 11-ம் தேதி 'சன் நெக்ஸ்ட்' 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து பலரும் இந்தப் படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

‘பீஸ்ட்’ படத்தின் இறுதிக்காட்சி குறித்து முன்னாள் விமானப்படை பைலட் ஒருவர், ‘இதில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மூலம் ‘பீஸ்ட்’ படத்தின் இறுதிக்காட்சி டிரெண்டாகியுள்ளது.

Previous article3 நாட்களில் ரூ.47.50 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டான்’
Next articleகமல் – ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!