Home மற்றவை க்ரைம் “இது போலி உலகம்” – கடலூர் தனியார் கல்லூரி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி...

“இது போலி உலகம்” – கடலூர் தனியார் கல்லூரி கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி உடல் மீட்பு

13
0

கடலூர்: கடலூரில் உள்ள தனியார் கல்லூரியின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியார் (கந்தசாமி நாயுடு) மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று( மே.17) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவிகள் சென்றனர். கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்ததும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் கல்லூரி வளாகத்தில் பரவியது. இதனால் மாணவிகளும், பேராசிரியர்களும் திரண்டனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலூரில் தனியார் கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Previous articleகுடிபோதையில் தகராறு!: சென்னை மதுரவாயல் அருகே கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது..!!
Next article‘படத்தைப் பார்த்துவிட்டு என் மகன் கட்டியணைத்துக் கொண்டார்’ – சர்காரு வாரி பாட்டா குறித்து மகேஷ்பாபு