Home தமிழகம் “அரசின் உதவியால் உறுதுணை” – பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய ஜெர்லின் அனிகா, பிரித்திவிக்கு உத்வேக வரவேற்பு

“அரசின் உதவியால் உறுதுணை” – பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய ஜெர்லின் அனிகா, பிரித்திவிக்கு உத்வேக வரவேற்பு

24
0

சென்னை: பிரேசில் நாட்டில் நடைபெற்ற காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை மாணவி, 2 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்ற சென்னையைச் சேர்ந்தவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டில் 24-வது காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மே 1-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிவடைந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயரட்சகன் என்பவரது மகளும், அரசுப் பள்ளி மாணவியுமான ஜெர்லின் அனிகா கலந்து கொண்டார். இறகு பந்து போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று மாணவி ஜெர்லின் அனிகா சாதனை படைத்தார். இதேபோல், சென்னையைச் சேர்ந்த பிரித்திவி பேட்மிட்டன் போட்டியில் 2 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற மதுரை மாணவி, 2 வெண்கலம் மற்றும் ஒரு சில்வர் பதக்கத்தை வென்ற சென்னையைச் சேர்ந்தவர்க்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Previous article100 நாள் வேலை | ‘பிடிஓ பொறுப்பு’ – ஊரக வளர்ச்சி இயக்குநர் உறுதியால் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்
Next articleபுதுச்சேரியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூவர் கைது