Home சினிமா 16, மே, 1929-ல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

16, மே, 1929-ல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

12
0

திரைப்படத் துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். அமெரிக்காவைச் சேர்ந்த அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) என்ற அமைப்பு வழங்கிவருகிறது. இந்த விருது வழங்கும் திட்டத்தை இந்த அகாடமியின் நிறுவனரான லூயிஸ் பி மேயர்தான் வடிவமைத்தார்.

ஜெனட் கெய்வனுக்கு விருது

சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. இது 94-வது ஆஸ்கர் விருது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம், துணை நடிகை, துணை நடிகர், சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, அனிமேஷன் படம், வெளிநாட்டுப் படம், முழு நீள ஆவணப் படம், ஆவணக் குறும்படம், குறும்படம், அனிமேஷன் குறும்படம், பின்னணி இசை, பாடல், ஒலியமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, படத் தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட் ஆகிய 23 பிரிவுகளில் இன்று ஆஸ்கர் வழங்கப்படுகிறது.

முதலாம் ஆஸ்கர் விருது, சிறந்த படம், கலைப் படம், நடிகர், நடிகை, சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, இயக்குநர், நகைச்சுவைப் பட இயக்குநர்,  ஒளிப்பதிவு, எஞினியரிங் எஃபெக்ட்ஸ், தலைப்பு வடிவமைப்பு ஆகிய 12 பிரிவுகளில்தாம் வழங்கப்பட்டன.

Previous articleஅமெரிக்கா: இனவெறியால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி; நேரலையால் பரபரப்பு – இளைஞன் கைது
Next articleபட்டாம்பூச்சி Exclusive: “சைக்கோ திரில்லர் vs அலட்சிய போலீஸ் – இதை ஏன் பீரியட் படமா எடுத்தோம்னா…”