Home தமிழகம் விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சி

விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை வீழ்ச்சி

15
0

போச்சம்பள்ளி  : போச்சம்பள்ளியில், விளைச்சல் அதிகரிப்பால் காலி பிளவர் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள், காலிபிளவர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் டன் கணக்கில் டெம்போ மூலம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மலை போல் குவித்து வைத்து விற்பனை ெசய்யப்படுகிறது. ஒரு காலி பிளவர் ₹10க்கு கூவி கூவி விற்பனை செய்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விளைச்சல் அதிகரிப்பால் காலிபிளவர் விலை குறைந்துள்ளது. ஒரு ஏக்கரில் பயிரிட ஏக்கருக்கு ₹25 ஆயிரம் செலவாகிறது. இதனால் எதிர்பார்த்த கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்,’ என்றனர்.

Previous articleகனமழை எதிரொலி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-412 மி.மீ. மழை பதிவு
Next articleகிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே மோதல்: பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து