Home மற்றவை க்ரைம் மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை

மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை

19
0

பொன்னேரி: பொன்னேரி திருவேங்கடபுரத்தை சேர்ந்தவர் மணிகண்ணன்(65), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ஜெயக்குமாரி(60), நேற்று முன்தினம் மாலை பொன்னேரி பஜாருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஜெயக்குமாரியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து ஜெயக்குமாரி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Previous articleஅண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
Next articleதாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை