Home தமிழகம் ‘பேருந்து கட்டண உயர்வு அட்டவணை’ குழப்பம் ஏன்? – தமிழக அரசு விளக்கம்

‘பேருந்து கட்டண உயர்வு அட்டவணை’ குழப்பம் ஏன்? – தமிழக அரசு விளக்கம்

19
0

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகிவிட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படிதான் பர்மிட் வழங்கப்படும்.

தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகிவிட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Previous articleமதுரையில் தனியார் நிறுவன காவலாளி படுகொலை: போலீசார் தீவிர விசாரணை
Next articleவிருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்