Home சினிமா பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’

பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’

22
0

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. படம் வெளியாகி இதுவரை 12 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.

பாலிவுட் இயக்குநர் திவ்யாங் தக்கர் (Divyang Thakkar) இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படம் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' (Jayeshbhai Jordaar). ஆதித்யா ஜோப்ராவின் யாஷ் ராஜ் ஃப்லீம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் உடன் ஷாலினி பாண்டே, தீக்‌ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதமே வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம் ஒமைக்ரான் கொரோனா வகை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. படம் வெளியாகி இதுவரை 12 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது. 

Previous article‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’
Next articleசுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘வள்ளி மயில்’ படப்பிடிப்பு தொடக்கம்