Home தமிழகம் பராமரிப்பு இல்லாத அழகிய மதுரை ரவுண்டானாக்கள்: புதர்மண்டி கிடக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா

பராமரிப்பு இல்லாத அழகிய மதுரை ரவுண்டானாக்கள்: புதர்மண்டி கிடக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா

7
0

மதுரை; மதுரையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 'ஸ்வச் ஐகானிக்' திட்டத்தில் மதுரையின் கலாசார சின்னங்களையும், பெருமைகளையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்க ரூ.2.4 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் மதுரை மாநகராட்சியின் முக்கிய ரவுண்டானாக்களை அழகுப்படுத்தி, அதில் பசுமைத் தோட்டம், மதுரையின் சிறப்பை பறைசாற்றும் சிலைகள் நிறுவி பாதுகாக்க திட்டமிடப்பட்டன. பாத்திமா கல்லுாரி ரவுண்டானாவில் மீனாட்சியம்மன் கோயில் தேர், பழங்காநத்தம் ரவுண்டானாவில் நாயக்கர் மகாலின் சிம்மாசனம் மற்றும் 10 தூண்கள் நிறுவப்பட்டன. செல்லூர் ரவுண்டானாவில் கபடி வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் விளையாடும் சிலை நிறுவப்பட்டது.

மதுரையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ரவுண்டானாக்கள், தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Previous articleதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மரத்தின் மீது மினி லாரி மோதி விபத்து
Next articleமே 24 முதல் மனு தாக்கல், ஜூன் 10-ல் வாக்குப் பதிவு: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு