Home தமிழகம் நூல் விலை உயர்வு | பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நூல் விலை உயர்வு | பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

7
0

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக, இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். தற்போதுள்ள நிலைமை மற்றும் தமிழகத்தின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்த போதும், நிலைமை சீரடையாத காரணத்தால், பருத்தி, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Previous articleதொலைதூர பயணப் பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்: அமைச்சர் சிவசங்கர்
Next articleதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு