Home உலகம் நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு: கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு: கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

11
0

நியூயார்க்: நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது பப்பல்லோ நகரம். இங்கு ‘டாப்ஸ் பிரண்ட்லி மார்க்கெட்’ என்ற சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்தசனிக்கிழமை 18 வயது இளைஞன், தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்து உள்ளே வந்தார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். பப்பல்லோ நகரில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தாக்குதல் நிறவெறியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Previous articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,288,226 பேர் பலி
Next articleவடகொரியாவில் 8.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று