Home சினிமா நாயுடனான அன்பைப் பேசும் ‘777 சார்லி’ – கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

நாயுடனான அன்பைப் பேசும் ‘777 சார்லி’ – கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

14
0

நாயுடனான அன்பு குறித்து பேசும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள '777 சார்லி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிக்கும் படம் '777 சார்லி'. இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

நாயுடனான அன்பு குறித்து பேசும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘777 சார்லி’படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

Previous articleபள்ளிகொண்டா | காரில் குட்கா கடத்தியதாக இருவர் கைது
Next article‘பதட்டப்படாம இருந்தா.. உயிரோட இருக்கலாம்’ – வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர்