Home சினிமா திரை விமர்சனம்: ரங்கா

திரை விமர்சனம்: ரங்கா

11
0

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யாவுக்கு (சிபி சத்யராஜ்) வலது கை சும்மா இருந்தால், அவராலேயே அந்த கையை கட்டுப்படுத்த முடியாது. இவரது அலுவலகத்தில் புதிதாக பணியில் சேரும் அபிநயாவை பார்த்ததும், அவர் தனது சிறுவயது தோழி என்பதை அறிந்து காதலிக்கத் தொடங்குகிறார். பெற்றோர் ஏற்பாட்டில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேனிலவுக்காக இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கு சென்று, நட்சத்திர விடுதியில் தங்குகின்றனர் இளம் தம்பதியர். அங்கு தங்குபவர்களை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்து, இணையத்தில் விற்று பணமாக்கும் கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதி அது. இதை கண்டறியும் ஆதித்யாவும், அவரது மனைவியும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். எதிர்பாராதவிதமாக அந்த கும்பலிடம் சிக்குகின்றனர். வலது கை உதவியால் மனைவியுடன் ஆதித்யா தப்பினாரா என்பது கதை.

வித்தியாசமான கதைபோல தோன்றினாலும், பிடிமானம் இல்லாத திரைக்கதையால் பெரும்பாலான காட்சிகள் துண்டு துண்டாக நிற்கின்றன. நாயகனின் ‘கை’ பிரச்சினையை அறிமுகப்படுத்துவது, தோழியை அவர் சந்திப்பது, காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது வரை, முதல் பாதி திரைப்படத்தை ஜாலியாக, கலகலப்பாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் வினோத் டி.எல்.

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யாவுக்கு (சிபி சத்யராஜ்) வலது கை சும்மா இருந்தால், அவராலேயே அந்த கையை கட்டுப்படுத்த முடியாது

Previous articleதிரை விமர்சனம்: ஐங்கரன்
Next articleசெஞ்சியில் விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது