Home தமிழகம் தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை...

தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

8
0

சென்னை: தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது. தமிழகத்தில் 93.55 சதவீதம் பேர் முதல் தவணையும், 81.55 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட மெகாதடுப்பூசி முகாம்கள் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது. தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் முகாம்கள் நடக்கவில்லை.

தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Previous articleநெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
Next articleஇந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது