Home விளையாட்டு கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்

கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்

21
0

கோவில்பட்டி: அகில இந்திய அளவிலான 12வது தேசிய இளையோர் ஆடவர் ஹாக்கிப் போட்டி  கோவில்பட்டியில் இன்று தொடங்குகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 30 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ, பி பிரிவில் தலா 3 அணிகளும்,  சி, டி, இ, எப், ஜி, எச் பிரிவுகளில் தலா 4 அணிகளும் உள்ளன. தமிழ்நாடு ஜி பிரிவிலும், புதுச்சேரி சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இன்று காலை தொடங்கும் முதல் ஆட்டத்தில்  பீகார் – அசாம் அணிகள் மோதுகின்றன. மாலையில் நடைபெறும் தொடக்கவிழாவுக்குப் பிறகு நடக்கும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு-சட்டீஸ்கர் அணிகள் களம் காண்கின்றன. லீக் சுற்று மே 24ம் தேதியுடன் முடிகிறது. காலிறுதி ஆட்டங்கள் மே 25ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் மே 26ம் தேதியும், இறுதி ஆட்டம்  மே 29ம் தேதியும் நடைபெற உள்ளன.

Previous articleலிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்
Next articleசில்லி பாயின்ட்…