Home சினிமா ‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’

‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’

9
0

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தைவிட எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் ‘விசித்திரன்’ கண்ணியமாகவும் நவீனச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஆண் – பெண் உறவைக் கையாண்டுள்ளது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகன் ராம்போ (விஜய் சேதுபதி) கண்மணியையும் (நயன்தாரா), கதீஜாவையும் (சமந்தா) காதலிக்கிறான். அவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலித்திருக்கும் உண்மை தெரிந்த பிறகும் கண்மணியும் கதீஜாவும் ராம்போவுக்காகப் போட்டி போடுகின்றனர். இன்னொரு பெண்ணைக் காதலிப்பதை ராம்போ தங்களிடம் திட்டமிட்டு மறைத்திருக்கிறான் என்று தெரிந்த பிறகு அவன் மீது கோபம்கொள்கிறார்களே தவிர, இருவருமே அவன் மீதான காதலைக் கைவிடவில்லை.

நாயகனுக்காகப் போட்டிபோடும் இரண்டு பெண்களும் பாலியல் உறவையும் திருமணத்தையும் ஒப்பிட்டு, அவற்றில் எது முக்கியமானது என்று விவாதிப்பது விடலைத்தனத்தையும் கடந்து ஆபாசத்தின் எல்லையைத் தொடுகிறது.

Previous articleகேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லி மஸ்க்’ திரைப்படம்
Next articleபாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’