Home தமிழகம் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

6
0

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலில் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 4.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தின் மீது உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 5 மணிக்கு மேற்கு ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் தொட்டாச்சாரியாருக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. இதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் கோபுர தரிசனம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலில் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது.

Previous articleஇந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது
Next articleதமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்