Home தமிழகம் அழைப்பிதழ் இல்லை, பேனர் இல்லை, மரியாதையும் இல்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் புலம்பல்

அழைப்பிதழ் இல்லை, பேனர் இல்லை, மரியாதையும் இல்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் புலம்பல்

10
0

புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவரான திமுக மாநில அமைப்பாளர் தொகுதியில் சாலைப் பணிக்கான பூமிபூஜைக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், "அழைப்பிதழும் இல்லை- பேனரில் படமும் இல்லை- மரியாதையும் இல்லை" என்று அதிகாரிகளை குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவின் தொகுதியான வில்லியனூரில் பல சாலைகள் மோசமாக உள்ளது. தற்போது அங்கு புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. வி. மணவெளி தண்டுக்கரை வீதியில் இருந்து ஒதியம்பட்டு வரையிலான சாலை ரூ.1 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், மணவெளி இரயில்வே கேட் முதல் திருக்காஞ்சி வரை உள்ள சாலை ரூ.1 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரம் என ரூ. 2 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவரான திமுக மாநில அமைப்பாளர் தொகுதியில் சாலைப் பணிக்கான பூமிபூஜைக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், “அழைப்பிதழும் இல்லை, பேனரில் படமும் இல்லை, மரியாதையும் இல்லை” என்று அதிகாரிகளை குற்றம் சாட்டினார்.  

Previous articleவேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
Next articleபாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!