Home தமிழகம் 50 அடிக்கு உள்வாங்கியது கடல்; ராமேஸ்வரத்தில் பரபரப்பு

50 அடிக்கு உள்வாங்கியது கடல்; ராமேஸ்வரத்தில் பரபரப்பு

8
0

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இன்று காலை திடீரென 50 அடி தூரத்துக்கு கடல் உள் வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இன்று காலை 6 மணியளவில் சுமார் 50 அடி தூரத்திற்கு திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடல் அடியில் உள்ள பவளப்பாறைகள், சிப்பிகள் உள்ளிட்டவை வெளியில் தென்பட்டன. கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 7.30 மணியளவில் மீண்டும் கடல் நீர்மட்டம் சீரானது. இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர். ராமேஸ்வரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்குவது வழக்கமாக நடைபெறுவதுதான். ஆனால் இன்று 50 அடி தொலைவு வரை கடல் உள்வாங்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் 2 மணி நேரத்திற்குள், மீண்டும் கடல் நீர்மட்டம் சீராகி விட்டது’’ என்று தெரிவித்தனர்.

Previous articleவாழப்பாடி அருகே காளியம்மன் கோயிலில் 100 பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத வழிபாடு
Next articleமறைசாட்சி தேவசகாயத்திற்கு இன்று ரோமில் புனிதர் பட்டம்; குமரி சர்ச்சுகளில் திருவுருவ பவனி