Home தமிழகம் 30 ஆண்டுகளில் 100 மாணவிகள் சிறார் வதை… கேரளத்தை அதிரவைத்த ஆசிரியர் போக்சோவில் கைது!

30 ஆண்டுகளில் 100 மாணவிகள் சிறார் வதை… கேரளத்தை அதிரவைத்த ஆசிரியர் போக்சோவில் கைது!

5
0

கேரள மாநிலம், மலப்புரம் அரசு உதவிப்பெறும் செயிண்ட் ஜெம்மாஸ் மகளிர் பள்ளியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவர் சசிகுமார்(60). ஆசிரியர் பணியிலிருந்து கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இவர் சி.பி.எம் கட்சி பொறுப்பிலும் உள்ளார். மலப்புரம் நகராட்சியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், சசிகுமார் முகநூலில் போட்ட ஒரு பதிவின் கீழ் கமெண்ட் போட்ட முன்னாள் மாணவி ஒருவர் `மீ டூ’ பாணியில் சிறார்வதை குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து பல மாணவிகள் அவருக்கு எதிராக `மீ டூ’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சசிகுமார் ஆசிரியராக இருந்த சமயத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகளை சிறார்வதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஆசிரியர் சசிகுமார் தன்னை பாலியல் ரீதியாக தொல்லைசெய்ததாக மலப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிரியர் சசிகுமார் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே, வயநாட்டில் ரிசார்ட் ஒன்றில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் சசிகுமாரை போலீஸார் கைது செய்தனர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து சசிகுமார் மா.கம்யூ., கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆசிரியர் சசிகுமார் பணிபுருந்த அரசு உதவிப்பெறும் பள்ளி

இதுகுறித்து ‘பூர்வ வித்யார்த்தி’ என்ற மாணவர் கூட்டமைப்பு பள்ளியில் விசாரணை நடத்தியது. அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த பீனா பிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆசிரியர் சசிகுமார் பல மாணவிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக தவறு செய்துள்ளார். வகுப்பறையில் அவர் அங்கும், இங்கும் நடந்துசெல்லும்போது அடிக்கடி தொட்டுச்செல்ல வசதியாக, குறிப்பிட்ட சில மாணவிகளை பெஞ்சின் ஓரத்தில் உட்கார வைத்திருக்கிறார். இரட்டை அர்த்தத்தில் பல காமெடிகளை சொல்லுவார். வெறுமனே தொடுவது போன்ற சில்மிஷம் மட்டுமல்ல, அவரது பாலியல் செயல்களை சகிக்க முடியாமல் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

ஒரு மாணவியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டதால் அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் வரை நடந்திருக்கிறது. அன்புக்கும், காமத்துக்கும் வித்தியாசம் பிரித்தறிய முடியாத குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்துள்ளார். அவர்மீது மாணவிகள் புகார் அளித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம், ‘நீங்கள் கொஞ்சுவதற்கு போக வேண்டாம்’ என மாணவிகளுக்கு அட்வைஸ் கூறி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டுள்ளது.

ஆசிரியர் சசிகுமார்

நிர்வாகம் கண்டுகொள்ளாததை பயன்படுத்தி அவர் பலமாக பெனேட்ரேஷன் (Penetration) வரை நடத்தியுள்ளார். குழந்தைகளுக்கு எதிர்ப்புகூட தெரிவிக்க முடியாத நிலையில் அமைதியாக இருந்துள்ளனர். என்னிடம் 2019-ல் உள்ள புகார் உள்ளது. இது பெண்களுக்கு மட்டுமான பள்ளி என்பதால் பெற்றோர் நம்பி விட்டிருக்கிறார்கள். முடி இப்படித்தான் வெட்ட வேண்டும், ஆடையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளியில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து போலீஸார், “6-ம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 9 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவிகளை குறிவைத்து இப்படி நடந்துள்ளார். பல குற்றச்சாட்டுகள் கூறபப்ட்டாலும் இப்போது ஒரு மாணவிதான் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

போக்சோ வழக்கு… ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதி! – விரட்டிப்பிடித்த போலீஸ்
கேரள மாநிலம், மலப்புரம் அரசு உதவிப்பெறும் செயிண்ட் ஜெம்மாஸ் மகளிர் பள்ளியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவர் சசிகுமார்(60). ஆசிரியர் பணியிலிருந்து கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இவர் சி.பி.எம் கட்சி பொறுப்பிலும் உள்ளார். மலப்புரம் நகராட்சியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், சசிகுமார் முகநூலில் போட்ட ஒரு பதிவின் கீழ் கமெண்ட் போட்ட முன்னாள் மாணவி ஒருவர் `மீ டூ’ பாணியில் சிறார்வதை குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து பல மாணவிகள் அவருக்கு எதிராக `மீ டூ’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சசிகுமார் ஆசிரியராக இருந்த சமயத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகளை சிறார்வதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஆசிரியர் சசிகுமார் தன்னை பாலியல் ரீதியாக தொல்லைசெய்ததாக மலப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிரியர் சசிகுமார் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கிடையே, வயநாட்டில் ரிசார்ட் ஒன்றில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் சசிகுமாரை போலீஸார் கைது செய்தனர். பாலியல் புகார் எழுந்ததை அடுத்து சசிகுமார் மா.கம்யூ., கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆசிரியர் சசிகுமார் பணிபுருந்த அரசு உதவிப்பெறும் பள்ளிஇதுகுறித்து ‘பூர்வ வித்யார்த்தி’ என்ற மாணவர் கூட்டமைப்பு பள்ளியில் விசாரணை நடத்தியது. அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த பீனா பிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆசிரியர் சசிகுமார் பல மாணவிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக தவறு செய்துள்ளார். வகுப்பறையில் அவர் அங்கும், இங்கும் நடந்துசெல்லும்போது அடிக்கடி தொட்டுச்செல்ல வசதியாக, குறிப்பிட்ட சில மாணவிகளை பெஞ்சின் ஓரத்தில் உட்கார வைத்திருக்கிறார். இரட்டை அர்த்தத்தில் பல காமெடிகளை சொல்லுவார். வெறுமனே தொடுவது போன்ற சில்மிஷம் மட்டுமல்ல, அவரது பாலியல் செயல்களை சகிக்க முடியாமல் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
ஒரு மாணவியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டதால் அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் வரை நடந்திருக்கிறது. அன்புக்கும், காமத்துக்கும் வித்தியாசம் பிரித்தறிய முடியாத குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்துள்ளார். அவர்மீது மாணவிகள் புகார் அளித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம், ‘நீங்கள் கொஞ்சுவதற்கு போக வேண்டாம்’ என மாணவிகளுக்கு அட்வைஸ் கூறி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டுள்ளது.
ஆசிரியர் சசிகுமார்நிர்வாகம் கண்டுகொள்ளாததை பயன்படுத்தி அவர் பலமாக பெனேட்ரேஷன் (Penetration) வரை நடத்தியுள்ளார். குழந்தைகளுக்கு எதிர்ப்புகூட தெரிவிக்க முடியாத நிலையில் அமைதியாக இருந்துள்ளனர். என்னிடம் 2019-ல் உள்ள புகார் உள்ளது. இது பெண்களுக்கு மட்டுமான பள்ளி என்பதால் பெற்றோர் நம்பி விட்டிருக்கிறார்கள். முடி இப்படித்தான் வெட்ட வேண்டும், ஆடையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளியில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து போலீஸார், “6-ம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 9 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவிகளை குறிவைத்து இப்படி நடந்துள்ளார். பல குற்றச்சாட்டுகள் கூறபப்ட்டாலும் இப்போது ஒரு மாணவிதான் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
போக்சோ வழக்கு… ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதி! – விரட்டிப்பிடித்த போலீஸ்

Previous articleபுதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு; ஒயிட்டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்பு மை பூசி அழித்த நபர்கள்
Next articleபுதுச்சேரியில் இளைஞரை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது