Home தமிழகம் விழுப்புரம்-காட்பாடி இடையே பயணிகள் ரயிலை துண்டித்து விரைவு ரயிலாக மாற்றம்: வரும் 23ம் தேதி முதல்...

விழுப்புரம்-காட்பாடி இடையே பயணிகள் ரயிலை துண்டித்து விரைவு ரயிலாக மாற்றம்: வரும் 23ம் தேதி முதல் இயக்க முடிவு

9
0

விழுப்புரம் – காட்பாடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவையை துண்டித்துவிட்டு, வரும் 23-ம் தேதி முதல் விரைவு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் – திருப்பதி இடையே 2 பயணிகள் ரயில்கள், விழுப்புரம் – காட்பாடி இடையே ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. 3 பயணிகள் ரயில் சேவை, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பப்பட்டன. பின்னர், இயக்கப்படவில்லை. கரோனா அலைகள் ஓய்ந்த பிறகும், 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் – காட்பாடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவையை துண்டித்துவிட்டு, வரும் 23-ம் தேதி முதல் விரைவு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது

Previous articleகுற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள்: சொத்து வரி உயர்வை ஆட்சேபிக்காத பொதுமக்கள்
Next article`திருக்குறளை தேசிய நூலாக்கணும்!’ – 2 மணி நேரத்தில் 133 திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்து மாணவர் சாதனை