Home தமிழகம் ரூ1,350 கோடி மதிப்பிலான திட்டத்தில் ஆம்பூரில் ஆறுவழிச்சாலை விரிவாக்க பணிகள் துவக்கம்: 2.5 கி.மீ. தூரம்...

ரூ1,350 கோடி மதிப்பிலான திட்டத்தில் ஆம்பூரில் ஆறுவழிச்சாலை விரிவாக்க பணிகள் துவக்கம்: 2.5 கி.மீ. தூரம் மேம்பாலம் அமைக்க போக்குவரத்து மாற்ற நடவடிக்கை

7
0

ஆம்பூர்:  ரூ1,350 கோடி மதிப்பிலான திட்டத்தில் ஆம்பூரில் ஆறுவழிச்சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை பெங்களூரு இடையே செல்லும்  என்.எச் 48 தேசிய நெடுஞ்சாலை ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் செல்கிறது. இந்த கிருஷ்ணகிரி வாலாஜா இடையில் அமைந்துள்ள இந்த சாலை ஆறுவழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆம்பூரில் இதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நில கையகப்படுத்துதல் மற்றும் உரிய அனுமதி ஆகியவற்றிற்காக காலதாமதம் ஆனது.இந்நிலையில் இந்த சாலை ஆம்பூரில் விரிவாக்கம் செய்யவும், அதற்காக சுமார் 32 ராட்சத தூண்கள் தாங்கி நிற்க சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடிய வகையில் இந்த சாலை மேம்பால சாலையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிக்னல் அருகே துவங்கி சாணாங்குப்பம் அருகே உள்ள ஆம்பூர் எல்லை வரை இந்த மேம்பாலம் அமைய உள்ளது. சுமார் ரூ1,350 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் முதல் பகுதியாக ரூ180 கோடி மதிப்பீட்டில் இந்த  பணிகள் துவங்க சர்வீஸ் சாலைகள் அகலப்படுத்த கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சோலூர் அருகே பூமி பூஜை போடப்பட்டது.உரிய ஆய்வுகளுக்கு பின்னர் நேற்று ஆம்பூர் பைபாஸ் சாலை ராஜிவ்காந்தி சிலைதுவங்கி பஸ் நிலையம் நோக்கி விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. ஜேசிபி உதவியுடன் இந்த சாலைகள் அகலப்படுத்தி போக்குவரத்தை மாற்றம் செய்த பின்னர் மேம்பால பணிகள் துவக்க உள்ளதாக சாலை அமைத்து வரும்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஉசிலம்பட்டி அருகே கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
Next articleநெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு?