Home மற்றவை க்ரைம் மாறி மாறி வெட்டி கொண்ட தந்தை, மகன்: மதுகுடிப்பதை தட்டி கேட்டதால் தகராறு

மாறி மாறி வெட்டி கொண்ட தந்தை, மகன்: மதுகுடிப்பதை தட்டி கேட்டதால் தகராறு

22
0

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், ஆத்திரத்தில் தந்தை, மகன் சரமாரியாக கத்தியால் வெட்டி கொண்டனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், திருமணிகுப்பம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). இவரது மகன் லட்சுமணன் (26). திருமணம் ஆகவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் சாலை விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தார். இதனால் அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். மேலும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர், அடிக்கடி மது அருந்தியுள்ளார்.மகன் மது அருந்துவதால் வேதனையடைந்த வெங்கடேசன், ஏன் இப்படி குடித்து உடலை கெடுத்து கொள்கிறாய். குடி பழக்கத்தை விடும்படி கண்டிப்பது வழக்கம். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லட்சுமணன், மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்றார். இதை பார்த்த தந்தை, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தந்தை வெங்கடேசனின் தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினார். அதை தடுத்து, கத்தியை பிடுங்கியபோது, கீழே இருந்த கல்லை எடுத்து அவர் மீது போட முயன்றார். இதை சுதாரித்து கொண்ட வெங்கடேசன், மகனை கத்தியால் வெட்டினார். பின்னர் இருவரும் அலறிடித்து மயங்கி விழுந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக வெங்கடேசனை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் லட்சுமணன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், எஸ்ஐ இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

Previous articleVikram: “அரசியல் கட்சி தொடங்கி சிறப்பா செயல்படுறீங்க ஆனால்…” – இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்!
Next articleவாலிபருக்கு சரமாரி அடி: 2 பேர் கைது