Home மற்றவை க்ரைம் போலி நகைகள் அடமானம் வைத்த வழக்கில் 4 வருடங்களுக்கு பின் 3 பேர் கைது

போலி நகைகள் அடமானம் வைத்த வழக்கில் 4 வருடங்களுக்கு பின் 3 பேர் கைது

14
0

அம்பத்தூர்: அம்பத்தூர் – அயப்பாக்கம் நெடுஞ்சாலை, கே.கே.நகரில் உள்ள வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு அம்பத்தூர், டி.ஜி.அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி(33), தனது 3 நண்பர்களுடன் வந்து 210 சவரன் நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் வரை பெற்றுள்ளார். 2019ம் ஆண்டு நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்துள்ளனர். அப்போது தமீம் அன்சாரி வைத்த நகைகள் அனைத்தும் தங்க மூலம் பூசிய போலி நகைகள் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு வங்கி மேலாளர் அம்பத்தூர் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த தமீம் அன்சாரி, முகமது கபீர்(39), முகமது சித்திக்(34) ஆகியோரை 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Previous article10 பேர் கும்பல் வெறிச்செயல் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை: போலீசார் விசாரணை
Next articleபெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி