Home மற்றவை க்ரைம் பைக் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி: டிரைவர் கைது

பைக் மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி: டிரைவர் கைது

12
0

சென்னை: கொரட்டூரை சேர்ந்தவர் ஐயப்பன் (28). பைக் ஷோரூமில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர், சதீஷ் (26). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு ஐயப்பன், சதீஷ் உள்பட நண்பர்கள் 4 பேர், பைக்கில் திருத்தணி முருகன் கோயிலுக்கு புறப்பட்டனர். ஒரு பைக்கை ஐயப்பன் ஓட்டினார். சதீஷ் பின்னால் உட்கார்ந்து இருந்தார். ஆவடி –  திருவள்ளூர் சாலை தொழுவூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலை வளைவில் ஐயப்பன் பைக் திரும்பியது. அப்போது, காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட் ஏற்றிக்கொண்டு திருநின்றவூர் நோக்கி சென்ற வேன், ஐயப்பன் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். அதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஐயப்பன் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர் தாங்கல் கிராமத்தை தினேஷ் (26) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்திய வேனை, பறிமுதல் செய்தனர்.

Previous articleதிருக்கோவிலூர் அருகே பயங்கரம் பள்ளி மாணவன் சரமாரி வெட்டி கொலை: சக மாணவர் கைது
Next article10 பேர் கும்பல் வெறிச்செயல் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை: போலீசார் விசாரணை