Home மற்றவை க்ரைம் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி

20
0

பெரம்பூர்: பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி(29). நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டிற்கு மர்ம நபர் சென்று தான் வங்கியில் இருந்து வருவதாக கூறி பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது அஸ்வினி, `நீங்கள் கூறுவதுபோல இங்கு யாரும் இல்லை’ என்று கூறிவிட்டு கதவை மூடினார். உடனே மர்ம நபர் கதவை தள்ளிவிட்டு அஸ்வினியை கழுத்தை பிடித்து அவர் அணிந்திருந்த தாலி செயினை அறுக்க முயற்சி செய்தார். அஸ்வினியின் அலறல் சத்தம்கேட்டு அவரது அம்மா பிரேமா உள்ளே இருந்து வந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து மர்ம நபர் தனது ஹெட்செட் ப்ளூடூத் உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு தப்பிச்சென்றார். புகாரின்படி தி.ரு.வி.க. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Previous articleபோலி நகைகள் அடமானம் வைத்த வழக்கில் 4 வருடங்களுக்கு பின் 3 பேர் கைது
Next articleமேற்கு வங்கம் | வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னத்திரை நடிகை