Home தமிழகம் புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு; ஒயிட்டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்பு மை பூசி...

புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு; ஒயிட்டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்பு மை பூசி அழித்த நபர்கள்

7
0

புதுச்சேரி: புதுச்சேரி ஒயிட்டவுன் வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை இரவோடு இரவாக கருப்பு மை பூசி அழித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என அதன் இயக்குநர் சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். தமிழ்ப் பற்றுள்ள புதுச்சேரி மக்களுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக, காங்கிரஸ், பாமக, விசிக மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் ஜிப்மரை கண்டித்து போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது. புதுச்சேரி ஒயிட்டவுன் பகுதியில் செஞ்சி, ஆம்பூர் சாலைக்கு இடைப்பட்ட வீதிகளின் சந்திப்புகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையின் கீழ் வழிகாட்டி பெயர்பலகை தமிழ், ஆங்கிலத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் பெரிய வாய்க்கால் சந்திப்புகளான லல்லி தொலாந்தாழ் வீதி- ஈஸ்வரன் கோயில் வீதி, தெபசான் வீதி- காமாட்சியம்மன் கோயில் வீதி, கலவை சுப்புராய செட்டியார் வீதி- செயின்ட் ழீழல் வீதி, மரைன் வீதி- காளத்தீஸ்வரன் கோயில் வீதி, லோரிஸ்தோன் வீதி- அம்பலத்தடையார்மடம் வீதி உள்ளிட்ட 5 இடங்களில் 10 பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, நீலநிறத்தில் வைக்கப்படும் பெயர் பலகைகளுக்குப் பதிலாக இவை, காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த பெயர் பலகைகளை 2 மர்ம நபர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும், பெருக்கல் குறியீடுகளை இட்டனர். இதனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் பார்த்து, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். புதுச்சேரியின் அடையாளமே நீல நிறத்திலான வழிகாட்டி பெயர் பலகைகள் தான். ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி நடப்பதால் காவி நிறத்தில் வைத்துள்ளனர். அதனால் இதை அழிக்கிறோம் என கூறி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து புதுச்சேரி ஸ்மார்ட்சிட்டி திட்ட இணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபனிடம் கேட்டதற்கு, இந்த பெயர் பலகைகள் சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என கூறினார்.

Previous articleஅணையிலிருந்து வீணாக வெளியேறும் நீர்: பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Next article30 ஆண்டுகளில் 100 மாணவிகள் சிறார் வதை… கேரளத்தை அதிரவைத்த ஆசிரியர் போக்சோவில் கைது!